April 29, 2012

உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியீடு

கூகுள் குரோம், மொஸில்லா பயர்பொக்ஸ் உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சில மாதங்களாகவே நடைபெற்று வரும் உலாவி வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
கூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும்.
இதன் மூலம் சி.பி.யுவின் வேலைப் பளு குறையும். அந்தப் பணி ஜி.பி.யு. எனப்படும் கிராபிக்ஸ் சிப்பிற்குச் சென்றுவிடும். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த வசதி குரோம் உலாவியின் முந்தைய பதிப்புகளில் தரப்பட்டது.
ஆனால் சில நாட்களில் இது மாறா நிலையிலேயே முடக்கிவைக்கப்பட்டது. தற்போது வந்திருக்கும் புதிய பதிப்பில் இது இயங்கும் நிலையில் தரப்பட்டுள்ளது.
இதன் இயக்கத்திற்குத் தேவையான இணக்கமான கிராபிக்ஸ் ஹார்ட்வேர் இருக்கும் கணணிகளில் மட்டுமே இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கணணியில் இது இயங்குமா எனத் தெரிந்து கொள்ள “chrome://gpu” என குரோம் பிரவுசர் யு.ஆர்.எல். விண்டோவில் டைப் செய்தால் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதி குறித்து ஏற்கனவே கூகுள் நிறுவனம் அளித்த ஒரு போட்டி மூலமாக, தகவல்களைப் பெற்றது. அவை குறை எதுவும் தெரிவிக்காததனால், இந்த பதிப்பு வெளியாகிறது.
இந்த புதிய பதிப்பில், கேம் விளையாட WebGL, ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி முப்பரிமாண காட்சி எனப் பல வசதிகளும் தரப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்படும் ஹார்ட்வேர் அமைப்பு இல்லை என்றாலும், இந்த உலாவி இயங்கும்.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான இந்த பிரவுசர் பதிப்புகள் https://www.google.com/chrome என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கின்றன.
பதிலுக்கு மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரின் பதிப்பு 10 ஐ சென்ற பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட்டுள்ளது.
இது பெரும்பாலும் முந்தைய பதிப்பில் இருந்த பிழை திருத்தப் பதிப்பாகவும், ஒரு சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டதாகவும் கிடைக்கிறது. தரப்பட்டுள்ள சில வசதிகளை இங்கு பட்டியலிடலாம்:
1. Back பட்டனை ஒருமுறை அழுத்திய பின்னரே Forward பட்டன் கிடைக்கும்.
2. வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களில், முழுத்திரையையும் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.
3. WebGL graphics மற்றும் CSS3 3D ஆகியவற்றிற்கான சப்போர்ட் தரப்பட்டுள்ளது.
4. பெரிய அளவிலான ஜாவா ஆப்லெட்களை இயக்கும் போதும், புக்மார்க்குகளை சீரமைக்கும்போதும், பிரவுசர் கிராஷ் ஆவதில்லை.
விண்டோஸ் இயக்கத்திற்கான பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த பதிப்பைப் பெhttp://www.mozilla.org/en-US/products/download.html?product=firefox10.0&os=win&lang=enUS என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

No comments:

Post a Comment