April 12, 2012

நொக்கியாவி​ன் Lumia 610 NFC கைப்பேசிகள்

அண்மைக்காலமாக தனது புதிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் நொக்கியா நிறுவனமானது தனது அடுத்த புதிய அறிமுகமான Lumia 610 NFC பற்றிய அறிவித்தலை வெளிவிட்டது.
இது தொழில்நுட்ப ரீதியில் விண்டோஸ் இயங்குதளத்தையும், NFC வன்பொருட்களையும் ஒருங்கே கொண்டுள்ள உலகின் முதலாவது கைப்பேசியாகும்.
இவற்றின் திரையானது 3.7 அங்குலமான WVGA LCD திரைகளாகும். மேலும் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 800MHz processor, 256MB RAM, 8GB உள்ளக மெமரி ஆகியவற்றையும் கொண்டுள்ளன.
இக்கைப்பேசிகள் முதற்கட்டமாக ஒரேன்ச் வலையமைப்பினூடு ஐரோப்பிய நாடுகளில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் படிப்படியாக ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment